CSK ஜெர்சியில் நடிகர் சிம்பு, இணையத்தில் செம வைரலான புகைப்படம்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு தொடர்ந்து தனது திரைப்படங்களை வேகமாக நடித்து முடித்து வருகிறார்.
அந்த வகையில் மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு தற்போது இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து சிம்பு இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது சிம்பு CSK அணியின் ஜெர்சியில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. விரைவில் IPL போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் சிம்பு CSK ஜெர்சியில் போஸ் கொடுத்துள்ள இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
