திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள்! போலீஸ் தடியடி
பீஸ்ட் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் வரும் 13ம் தேதி திரைக்கு வருகிறது.
முன்பதிவு
டிக்கெட் முன்பதிவு சமீபத்தில் தொடங்கி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை முன்பதிவு தொடங்கிய தியேட்டர்களில் அதிக அளவில் டிக்கெட்டுகளை விற்று தீர்ந்து இருக்கின்றன. சென்னையில் முதல் நாள் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
தடியடி
இந்நிலையில் இன்று கடலூரில் இருக்கும் ஒரு தியேட்டரில் ரசிகர் ஷோவுக்கு அனுமதி அளிக்கவில்லை என சொல்லி விஜய் ரசிகர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போலீசார் விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்தி இருக்கின்றனர்.
ஏ ஆர் முருகதாஸின் அடுத்த பிரமாண்ட படம், இந்திய சினிமாவே பார்த்திராத ஒன்று