#Cult (தெலுங்கு): திரை விமர்சனம்
விஷ்வாக் சென் இயக்கி நடித்திருக்கும் தெலுங்கு திரைப்படமான #Cult எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்
உள்துறை அமைச்சரான முரளி ஷர்மா கோவாவின் முதலமைச்சராக முயற்சித்து வருகிறார். அவரது மகன் எல்வின் (தாரக் பொன்னப்பா) தனது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட முடிவெடுத்துள்ளார்.
தேர்தல் சூழலில் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம், எதிர்க்கட்சிகளால் தனக்கு நெகட்டிவ் ஆக அமையலாம் என்று பயப்படும் முரளி ஷர்மா மகன் எல்வினிடம் இந்த முறை வேண்டாம் என்கிறார்.
ஆனால், அவரை பேச்சைக் கேட்காமல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் தனக்கு பிறந்தநாள் என்பதால், Cult பார்ட்டியை கொண்டாடியே தீருவேன் என்று எல்வின் அடம்பிடிப்பதால் முரளி ஷர்மாவும் ஒப்புக்கொள்கிறார்.

இந்த சூழலில் இயக்குநர் ஆகும் கனவில் இருக்கும் மூன்று நண்பர்கள், ஆக்ஷ்ன் கதையை தயார் செய்ய தயாரிப்பாளரின் அறிவுறுத்தலின் பேரில் கோவாவிற்கு வருகின்றனர். திருட்டுத்தனமாக Cult பார்ட்டிக்கான 3 பாஸ்களுடன் எல்வினின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மூவரும் இணைகின்றனர்.
அந்த பார்ட்டியில் அனிமேஷன் பொம்மை ஒன்று திரையில் தோன்றி நாம் ஒரு கேம் விளையாட போகிறோம் எனக் கூறி, மியூசிக்கல் சேர் விளையாட்டை நடத்துகிறது. எல்லோரும் எதோ விளையாட்டுதான் என்று நினைக்க, அதில் தோல்வியுற்ற மூவர் போட்டி விதிப்படி கொல்லப்படுகிறார்கள்.

இதனால் பலரும் அலறி வெளியேற முயற்சிக்க, கட்டிடத்தை சுற்றிலும் RDX வெடிகுண்டு பொருத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது. அதே சமயம் DSP சன்கல்ப் நாயக் (விஷ்வாக் சென்) அதே கட்டிடத்தில் இருப்பது முரளி ஷர்மா, கமிஷ்னர் ஸ்ரீகாந்திற்கு தெரிய வர, அவர் மூலமாக எல்வினை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்.
எல்வின் உட்பட நூற்றுக்கணக்கானோரை சன்கல்ப் நாயக் காப்பாற்றினாரா? உள்ளே இருப்பவர்களை கொல்வது யார்? என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
வளர்ந்து வரும் ஹீரோவான விஷ்வாக் சென் இயக்கியிருக்கும் மூன்றாவது படம் இது. தானே இயக்குநர் என்றாலும் மிகவும் தாமதமாகவே கதைக்குள் வருகிறார். அவர் வந்த பின்தான் கதையே ஆரம்பிக்கிறது என்று கூறலாம். அந்த அளவிற்கு முதல் அரைமணி நேரம் ஜவ்வாக இழுவிட்டார்.
சைக்கோ கொலைகாரனிடம் சிக்கிக் கொண்டவர்களை ஹீரோ எப்படி காப்பாற்றினார் என்ற கதைக்கருவை முடிந்த வரை சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சித்துள்ளார் விஷ்வாக் சென்.

இரண்டாம் பாதி மிகவும் பரபரப்பாக செல்கிறது. பிளாஷ்பேக்கில் சில விஷயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றாலும், அதில் எமோஷனல் ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. வில்லனுக்கான கேரக்ட்டரை மிகவும் சிறப்பாக, ஸ்ட்ராங்காக வடிவமைத்துள்ளார் விஷ்வாக் சென். அவரும் வழக்கம் போல் தனது போலீஸ் கதாபாத்திரத்தை அசால்ட்டாக செய்துள்ளார்.
தாரக் பொன்னப்பா, முரளி ஷர்மா ஏற்றிருக்கும் கதாபாத்திரங்கள் பல படங்களில் அவர்கள் செய்தது என்றாலும், கதைக்கு ஏற்ப கச்சிதமாக நடித்துள்ளனர். ஹீரோவுக்கு ஆரம்பத்தில் பில்டப் கொடுக்கும் ஸ்ரீகாந்த் ஐயங்கார் மன்னிப்பு கேட்க சீன் குபீர் காமெடி.
அனிருத் பாஸ்கர் ஆங்காங்கே காமெடி செய்கிறார். EZY, கார்த்திகேயா மற்றும் அனிருத் கூட்டணி காமெடி செய்ய முயற்சித்தாலும், நம் பொறுமையை சோதிக்கும்படியாகவே அந்த காட்சிகள் நகர்கின்றன. காயத்ரி பரத்வாஜ் வழக்கமான ஹீரோயினாக ஸ்கோர் செய்ய, வில்லனாக நடித்திருக்கும் செப்புரி விவேக் அட்டகாசம் செய்துள்ளார்.

குறிப்பாக, பிளாஷ்பேக் காட்சிகளில் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். ரவி பஸ்ரூரின் பின்னணி இசை படத்தை பரபரப்பாக கொண்டு செல்ல உதவுகிறது. படத்தொகுப்பாளர் ரவி தேஜா கிரிஜாலா முதல் பாதியில் கண்டிப்பாக சில காட்சிகளை வெட்டியிருக்கலாம்.
அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு பளபளக்கும் பார்ட்டி ஹாலில் நடக்கும் சம்பவங்களை நேர்த்தியாக காட்டியிருக்கிறது. கருணாகர் மற்றும் ஜோஷுவாவின் சண்டைக்காட்சிகள் இரத்தக்களரிதான். ராங் டர்ன், ஸா படங்களில் வருவதுபோல் படம் முழுக்க இரத்தவாடை அடிக்கிறது.
க்ளாப்ஸ்
- விஷ்வாக் சென்
- இரண்டாம் பாதி
- பிளாஷ்பேக்
- கிளைமேக்ஸ்
பல்ப்ஸ்
- பொறுமையை சோதிக்கும் முதல் 30 நிமிடங்கள்
மொத்தத்தில் இந்த #கல்ட் இரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் பட விரும்பிகளுக்கானது. இயக்குநராக விஷ்வாக் சென் இப்படத்திலும் ஜெயித்துவிட்டார்.

325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan