விருமாண்டி நடிகையா இது? வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்! சினிமாவை விட்டு காணாமல் போன அவர், என்ன ஆனார்?
உன்னன விட இந்த உலகத்தில் உசந்தது ஒன்னுமில்ல என்ற விருமாண்டி பாடல் இன்னும் பல மேடை நிகழ்ச்சிகளில் பாடப்படும் ஒன்று. கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிகை அபிராமி நடித்திருந்தார்.
மலையாள சினிமா நடிகையான இவர் வானவில் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின் இவர் 2001, 2002 ல், மிடில் கிளாஸ் மாதவன், சார்லி சாப்ளின், சமுத்திரம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். பின்னர் 2004 ல் விருமாண்டி படத்திற்கு பிறகு 11 வருடங்கள் கழித்து ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தில் வந்திருந்தார்.
அதன் பின் இவரை தமிழ் படங்களில் காண முடியவில்லை. மலையாளம் தெலுங்கு, கன்னட சினிமா படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தவர் மீண்டும் 4 வருடங்கள் கழித்து சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் ஜனவரி 8 ல் ஓடிடி தளத்தில் மாதவன், ஸ்ரத்தா ஸ்ரீ நாத் நடிப்பில் வெளியாகவுள்ள மாறா படத்தில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலரில் உடல் பெருத்த நிலையில் அபிராமியை கண்ட ரசிகர்கள் அவர் தான் இது என வினவியுள்ளனர்?
அபிராமி 2009 ல் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
Official Trailer | #Maara.
— LetsOTT GLOBAL (@LetsOTT) December 29, 2020
Premiering on Amazon Prime, January 8.pic.twitter.com/KteAf3cdRT