வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு குழந்தையுடன் விஜய் எடுத்த கியூட்டான புகைப்படம்- செம வைரல்
விஜய்யின் வாரிசு
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் பல வசூல் சாதனைகளை செய்துள்ள ஒரு நடிகர். ரஜினியை அடுத்த லிஸ்டில் இவரது படங்களின் சாதனைகள் தான் அதிகம் இருக்கும். நிறைய வசூல் சாதனை செய்த விஜய்யின் கடைசி படமான பீஸ்ட் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை.
சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் சாதாரண வசூலை தான் பெற்றுள்ளது, அதுவே விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் கவலையாக தான் இருந்தது.
தற்போது அவர்கள் வாரிசு திரைப்படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர், இப்படம் கண்டிப்பாக வசூல் வேட்டை செய்யும் என நம்புகின்றனர்.
கியூட்டான போட்டோ
இந்த வாரிசு திரைப்படத்தை தயாரிப்பவர் தில் ராஜு. இவருடைய முதல் மனைவி மாரடைப்பால் உயிரிழக்க 2020ல் வியாகா என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2022 வருட ஆரம்பத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
தற்போது அவருடைய மகனை கையில் தூக்கி வைத்துக்கொண்டு விஜய் வாரிசு படப்பிடிப்பில் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பழம்பெரும் நடிகர் நம்பியாரின் மகனை பார்த்துள்ளீர்களா?- இதுவரை பார்க்காத புகைப்படம்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
