குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சிக்கு இந்த பிரபல நடிகர் வருகிறாரா?- வெளிவந்த புகைப்படம், செம குஷியில் ரசிகர்கள்
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியாக ஓடிக் கொண்டிருக்கிறது குக் வித் கோமாளி 3. நிகழ்ச்சி தொடங்கி எலிமினேஷன் எல்லாம் நடந்துவிட்டது.
ஆனால் 2வது சீசன் அளவிற்கு இன்னும் மக்களிடம் ரீச் ஆகவில்லை 3வது சீசன் என்று தான் கூற வேண்டும்.
நாம் ரசித்த கோமாளிகள் இருந்தாலும் போட்டியாளர்கள் யாரும் மக்கள் மனதில் பெரிய அளவில் இடம் பிடிக்கவில்லை. இந்த வாரம் நிகழ்ச்சியில் என்னென்ன கலாட்டாக்கள் இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த நேரத்தில் நிகழ்ச்சி குறித்து ஒரு தகவல். அதாவது நடிகர் துல்கர் சல்மான் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அவர் நடித்துள்ள Hey Sinamika என்ற படத்தை புரொமோட் செய்ய வந்துள்ளாராம்.
ரக்ஷன் மற்றும் ஷிவாங்கி குக் வித் கோமாளி 3 செட்டில் துல்கருடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ பாருங்கள்,