குக் வித் கோமாளி 3 ரசிகர்களே, அடுத்த சீசன் கலாட்டாவுக்கு தயாரா?- வெளிவந்த ஷோ Launch அப்டேட்
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களுக்கு பிடித்தது போல் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின.
அப்படி அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஷோக்களில் இதை அடித்துக் கொள்ளவே முடியாத என்று ரசிகர்களே கூறும் அளவிற்கு பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து 2வது சீசன் ஒளிபரப்பாக பெரிய ஹிட். இதில் பங்குபெற்ற பலருக்கு இப்போது சினிமாவில் நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
அதில் பங்குபெற்றவர்களும் நிகழ்ச்சி பெரிய ரீச் கொடுத்தது என்று கூறியுள்ளார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பில் இருந்தே 3வது சீசன் குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது வந்த சூப்பர் அப்டேட் என்னவென்றால் வரும் நவம்பர் மாதம் முதல் அல்லது நடுவில் நிகழ்ச்சி ஆரம்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அநேகமாக தீபாவளி அன்று கூட நிகழ்ச்சி தொடங்கலாம் என்கின்றனர்.