குக் வித் கோமாளி அஸ்வினுக்கு ஆதரவாக பேசிய பிரபல தயாரிப்பாளர்! யார் தெரியுமா?
குக் வித் கோமாளி என்ற ஒரு நிகழ்ச்சியின் மூலமாக பெரியளவிலான ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்தவர் தான் அஸ்வின்.
ஆனால் அவரின் சமீபத்திய பேச்சால் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்புகளை சந்தித்து வருகிறார்.
மேடையில் தான் 40 கதைகளை கேட்டு தூங்கியதாக சொன்னதும், அவரின் நடவடிக்கைகளும் நெட்டிசன்களின் கடும் எதிர்ப்புகளை தற்போது வரை சந்தித்து வருகிறது.
இதனிடையே தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு அஸ்வினின் பெயரை குறிப்பிடாமல் ட்விட்டரில் ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
"சினிமாவில் நாம் பார்க்கும் கதைகளை விட அதிக சுவாரசியங்கள் கதை சொல்லும் நிகழ்வுகளில் உண்டு. பலர் வாழ்வை புரட்டிப்போடும் தருணம் என்பதால் அது சற்றே அந்தரங்கமான விசயமும் கூட.
அனுபவக் குறைபாட்டால் நிகழ்ந்த ஓர் சிறுதவறை பெருந்தன்மையுடன் நாம் கடந்து செல்வோமாக. அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்!" என தெரிவித்துள்ளார்.
சினிமாவில் நாம் பார்க்கும் கதைகளை விட அதிக சுவாரசியங்கள் கதை சொல்லும் நிகழ்வுகளில் உண்டு.பலர் வாழ்வை புரட்டிப்போடும் தருணம் என்பதால் அது சற்றே அந்தரங்கமான விசயமும் கூட. அனுபவக் குறைபாட்டால் நிகழ்ந்த ஓர் சிறுதவறை பெருந்தன்மையுடன் நாம் கடந்து செல்வோமாக. அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்!
— SR Prabhu (@prabhu_sr) December 7, 2021