அடுத்தடுத்து படவாய்ப்புகள், அசத்தும் CWC புகழ் அஸ்வின்!

Ashwin Cook with comali
By Jeeva Nov 02, 2021 03:10 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அதிகம் பேரை கவர்ந்த ரியாலிட்டி ஷோ தான் Cook With Comali என்னும் சமையல் சார்ந்த நிகழ்ச்சி.

இதில் பங்கேற்ற பலரும் மக்கள் மத்தியில் favourite போட்டியாளராக மாறியிருப்பதில் ஆச்சர்யமில்லை ஏனென்றால் இந்த நிகழ்ச்சி அந்தளவுக்கு மக்களை சிரிக்கவைத்து முற்றிலும் வித்யாசமான அணுகுமுறையில் எடுக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக இதன் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாயிருக்கும் போட்டியாளர் அஸ்வின் குமார். இவர் இதுவரை நடித்த ஆல்பம் பாடல்கள் எல்லாம் ஹிட் அடித்திருக்கும் நிலையில் அவரை தேடி பட வாய்ப்புகளும் வர தொடங்கியுள்ளது.

அதன்படி புதுமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் அஸ்வின் முதன் முதலில் நடித்து வெளியாக காத்திருக்கிறது 'என்ன சொல்ல போகிறாய்'. இப்படத்திற்கு விவேக் மெர்வின் duo இசையமைத்திருக்கிறது.

இந்த நிலையில் தான் படம் வெளியாவதற்கு முன்பே அஸ்வின் அடுத்த படத்தில் கமிட் ஆகியிருப்பதாக மற்றோரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை மைனா கும்கி போன்ற படங்களை இயக்கிய பிரபு சாலமன் இயக்கபோவாதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

   

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US