அஸ்வினின் ட்ரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய குக் வித் கோமாளி பிரபலங்கள், யார் யாரென்று பாருங்கள்.
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளனர்.
மேலும் தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் பைனல்ஸ் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, ஷகீலா, பவித்ரா உள்ளிட்டோர் போட்டி போடுகின்றனர்.
இதனிடையே நேற்று குக் வித் கோமாளி பைனல்ஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியானது, இதில் முக்கிய நடிகர் STR சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் நடித்திருந்த குட்டி பட்டாஸ் என்ற பாடல் இணையத்தில் பெரியளவில் ட்ரெண்டானது, அப்பாடலில் பிகில் பட நடிகையும் அவருடன் நடனமாடி இருந்தார்.
மேலும் தற்போது அந்த குட்டி பட்டாஸ் பாடலுக்கு குக் வித் கோமாளி பிரபலங்கள் அஸ்வின், புகழ், சக்தி மூவரும் நடனமாடியுள்ள வீடியோவை பதிவிட்டுள்ளனர்.
இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.