குக் வித் கோமாளி பிரபலத்திற்கு ஏற்பட்ட விபத்து..! ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகிய அவரின் பதிவு.
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி சீசன் 2, இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.
இதனிடையே இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வரும் குக் வித் கோமாளி சீசன் 2-ல் தற்போது கனி, பாபா பாஸ்கர், ஷகிலா, பவித்ரா, அஸ்வின் என ஐந்து முக்கிய போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் அனைவரும் பிடித்த கோமாளியான மணிமேகலை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சியளிக்கும் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ஆம், தனக்கு ஒரு சிறிய விபத்து நடந்ததாகவும், ஆனால் தற்போது நன்றாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அடுத்த இரண்டு வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது. தனது டீம்மை மிஸ் செய்ய போவதாகவும் கூறியுள்ளார்.