விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழுக்கு சென்ற குக் வித் கோமாளி பிரபலம் - அதுவும் இந்த சீரியலில் நடிக்கிறாரா
சின்னத்திரையில் அதிகம் விரும்பப்படும், ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி.
இதில் சென்ற குக் வித் கோமாளி சீசன் 1 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
ஆனால் சில மாதங்களுக்கு முன் துவங்கிய குக் வித் கோமாளி சீசன் 2, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அமோக வரவேற்பை முதல் எபிசோடிலேயே பெற்றது.
இந்த குக் வித் கோமாளி சீசன் 2வில் ஷகீலா, பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், தீபா, தர்ஷா, பவித்ரா, மதுரைமுத்து, பலரும் கலந்துகொண்டனர்.
ஆனால் இதில் சில வாரங்களிலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேறியவர் நடிகை தீபா.
சில வாரங்கள் மட்டுமே வந்திருந்தாலும் மக்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்துவிட்டார்.
இந்நிலையில் இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோஹினி சீரியலில் நடித்து வருகிறார்.
இதில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு சாமியார் வேடம் போட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..