கோலாகலமாக நடந்த CWC புகழ் அஷ்வின் திருமணம்... அழகிய ஜோடியின் போட்டோ
குக் வித் கோமாளி
கோவையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த பிரபலங்கள் ஏராளம்.
அப்படி இளம் வயதில் சினிமாவில் நடிக்க சென்னை வந்தவர் தான் அஷ்வின். அட நான் அஷ்வின் ரசிகன் என லட்சக் கணக்கான ரசிகர்கள் சொல்ல காரணமாக இருந்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.

விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி பலருக்கு பெரிய வெளிச்சத்தை கொடுத்தது, அப்படி அஷ்வினுக்கும் இந்த ஷோ பெரிய ரீச் கொடுத்தது. இந்நிகழ்ச்சி மூலம் அஷ்வினை தங்கள் வீட்டுப் பையனாகவே நினைக்கும் பலர் உள்ளனர்.
சின்னத்திரை ஷோக்கள், சீரியல்கள் நடித்துவந்த அஷ்வின் என்ன சொல்ல போகிறாய் படம் மூலம் ஹீரோவாக கோலிவுட்டில் அறிமுகம் ஆனார். படங்களில் மட்டும் இல்லாமல் வெப் தொடர்கள், தெலுங்கு படங்கள் எனவும் கவனம் செலுத்துகிறார்.
திருமணம்
இந்த நிலையில் தான் அஷ்வினின் திருமணம் குறித்த தகவல் சில தினங்களுக்கு முன் வெளிவந்தது.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கு பெரிய ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் ராஜசேகர் அவர்களின் பேத்தி புவனேஸ்வரியை அஷ்வின் குமார் இன்று கோவையில் உறவினர்கள் சூழ திருமணம் செய்துகொண்டுள்ளார்.
திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் நடிகர் அஷ்வின் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ,
