தாலி கட்டிக்கொள்வது தமிழ் கலாச்சாரமே இல்லை, அதை புருஷன் கட்டவில்லை- CWC கனி ஓபன் டாக்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் பங்குபெற்று டைட்டிலை வென்றவர் கனி. இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் இவர் அண்மையில் லைவ் வீடியோ வந்தார்.
அதில் அவர் நிறைய பேர் தாலி ஏன் அணியவில்லை என கேட்கிறார்கள். தாலி கட்டிக்கொள்வது தமிழ் கலாச்சாரத்தில் இல்லாத ஒரு விஷயம், இடையில் புகுத்தப்பட்டது என நான் நம்புகிறேன்.
தமிழ் மரபு என்னவென்றால் நம்ம மனசுக்கு பிடிச்சவங்கள, நாம மதிக்கிறவங்க முன்னிலையில், மாலை மாற்றி இவர் என் இணை, இவர் என் துணை என்று சொல்லி அவருடன் வாழ்க்கையை தொடங்குவதுதான்.
அதுதான் தமிழர்கள் மரபு என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் தாலி கட்டியே நான் திருமணம் செய்தேன். எனக்கும் அது பிடிக்கும். திருமணம் நடந்தது என்பதற்கான அடையாளமாக தாலி இருந்தது. மூன்றாவது மாதம் தான் அந்த தாலியை மாற்றினார்கள்.
அதுவரை மஞ்சள் தாலியை நான் அணிந்திருந்தேன். அதை மாற்றி கட்டும் போது அதை மாற்றி கட்டியது என் புருஷன் கிடையாது. சொந்தக்காரர்கள் தான் அதை கட்டினார்கள்.
தாலி கட்டுவது என்பது புருஷனுக்கான ஒரு விஷயம் தானே? என் கணவருக்கான ஒரு விஷயம் என்று மட்டுமே நான் நினைத்திருந்தேன்.
யாரோ ஒருவர் அந்த தாலியை கட்டினார்கள், யாரோ கட்டிய அந்த மூன்று முடிச்சு என்பதால் அதன் மீது பெரிய ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது என பேசியுள்ளார்.