குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி புகழ் மாதம்பட்டி ரங்கராஜின் அப்பா யார் தெரியுமா? வைரலாகும் போட்டோ
மாதம்பட்டி ரங்கராஜ்
மனிதர்கள் சாப்பிடும் வரை சமையல் தொழிலுக்கு பஞ்சமே இருக்காது.
அப்படி சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு படங்கள் நடித்தாலும் அந்த கலை சரியான வரவேற்பு கொடுக்கவில்லை. எனவே தனக்கு பிடித்த சமையல் தொழிலை கையில் எடுத்து இப்போது சாதனை புரிந்து வருபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.
இவரது சமையல் என்றாலே பிரம்மாண்டமும் அறுசுவை வகை என பிரம்மிக்க வைக்கும் உணவு வகைகள் தான் ஸ்பெஷல்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, எல்.முருகன் மற்றும் முன்னணி நடிகர், நடிகைகள் என அனைவரும் மாதம்பட்டி ரங்கராஜ் அறுசுவை உணவை ருசித்துள்ளனர்.
சமையல் தொழிலில் பல சாதனைகளை புரிந்து வரும் மாதம்பட்டி ரங்கராஜ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கியுள்ளார்.
ரங்கராஜ் அப்பா
கடந்த சில நாட்களாகவே மாதம்பட்டி ரங்கராஜின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. அப்படி மாதம்பட்டி ரங்கராஜின் அப்பாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ரங்கராஜின் அப்பாவும் சமையல் கலைஞராக இருந்தவர் தானாம். அவரின் சமையலை நடிகர் திலகம் சுவைத்து பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. தந்தையை போல அவரது மகனும் சமையல் தொழிலில் இறங்கி சாதித்து வருகிறார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
