குக் வித் கோமாளி புகழை நேரில் காண குவிந்த ரசிகர்கள் கூட்டம்.. முன்னணி நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளம், வீடியோ இதோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நகைச்சுவை கலந்து சமையல் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக விஜய் டிவி புகழ், KPY பாலா, சூப்பர் சிங்கர் ஷிவாங்கி, தொகுப்பாளினி மணிமேகலை உள்ளிட்டோர் இருந்து வருகின்றனர்.
இதில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒருவர் விஜய் டிவி புகழ். ஆம் தனது நகைச்சுவை கலந்த உடல் மொழியால் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளார் புகழ். தல அஜித் மற்றும் நடிகர் சந்தானம் என பலருடைய திரைப்படங்களில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் விஜய் டிவி புகழ்.
இந்நிலையில் இந்த படங்களின் படப்பிடிப்பில் புகழை சந்திக்க, கூட்டம் கூட்டமாய், முன்னணி நடிகர்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளம் வந்துள்ளனர். அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு, அதன்பின் அங்கிருந்து சென்றுள்ளார் விஜய் டிவி புகழ்.
இதோ அந்த வீடியோ..
Lucky to have fans like this pic.twitter.com/g2Gbain2wy
— Pugazh (@pugazh_iam) January 9, 2021
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri