குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் புகழுக்கு குழந்தை பிறந்தது- பிறந்த குழந்தையுடன் அவரே வெளியிட்ட பதிவு
குக் வித் கோமாளி
வேலை வேலை என பிஸியாக பரபரப்பாக இருக்கும் மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பது கஷ்டமான டாஸ்க்.
ஆனால் அப்படிபட்ட மக்களையும் தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் மூலம் காமெடி செய்து சிரிக்க வைத்து வருகிறார் புகழ்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் கோமாளியாக கலந்துகொண்டு இவர் செய்த கலாட்டாக்கள் ஏராளம், சிரித்து சிரித்து மக்கள் வயிறு வலிக்கும் வரை சிரித்துள்ளார்கள்.
அப்படிபட்டவருக்கு இப்போது நிறைய பட வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன.
நடிகரின் குழந்தை
நடிகர் புகழ் தனது நீண்டநாள் காதலி பென்ஸி என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். அண்மையில் கோலாகலமாக புகழின் மனைவிக்கு சீமந்தமும் நடந்தது.
இந்த நிலையில் புகழுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாம். குழந்தையின் கால் புகைப்படத்துடன் அவரே இந்த சந்தோஷ செய்தியை வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
You May Like This Video

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
