புதிய உலக சாதனை ஒன்றை செய்துள்ள CWC பிரபலம் புகழ் மகள்... அட சூப்பர் பாப்பா
நடிகர் புகழ்
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி ஷோக்களில் கலக்கப்போவது யாரு, சிரிப்பு டா, அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கும்.
காரணம் சிரிக்க மறந்த மக்களையும் இந்த நிகழ்ச்சிகள் நிறைய சிரிக்க வைத்துள்ளது. இந்த ஷோக்கள் மூலம் தனது காமெடி திறமையை வெளிக்காட்டி வந்த புகழுக்கு குக் வித் கோமாளி என்ற ஷோ ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
அந்த ஷோ கொடுத்த பிரபலம் இப்போது நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். சிக்ஸர், கைதி, காக்டெயில், சபாபதி, வலிமை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மகளின் சாதனை
நடிகர் புகழ் 2 ஆண்டுகளுக்கு முன்பு பென்ஸி ரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரித்தன்யா என்ற மகள் உள்ளார். சமீபத்தில் புகழ் தனது மகளின் முதல் பிறந்தநாளை பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்து கொண்டாடினார்.
தற்போது 11 மாதங்கள் 16 நாட்களே ஆன ரிதன்யா, 2 கிலோ எடையுள்ள டம்ப்பெல்லை இடைவிடாமல் 17 வினாடிகள் பிடித்து சர்வதேச சாதனை புத்தகத்தில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் என்று கின்னஸ் சாதனையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பான புகைப்படம் வெளியாக ரசிகர்கள் குழந்தைக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
