குக் வித் கோமாளி பிரபலம் புகழுக்கு இப்போது நடந்தது இரண்டாவது திருமணமா?- ஷாக்கிங் தகவல்
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியில் 2019ம் ஆண்டு புதிய நிகழ்ச்சியாக தொடங்கப்பட்டது குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி. சமையல் செய்த தெரிந்தவர்களை, சுத்தமாக சமையலை பற்றி எதுவும் தெரியாதவர்கள் வைத்து இந்த காமெடி கலந்து சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
முதல் சீசன் வெற்றி 2, 3 சீசன்கள் முடிந்துவிட்டது. முதல் சீசனில் வனிதா, இரண்டாவது கனி, 3வது சீசனில் ஸ்ருதிகா வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள்.
இந்த 3 சீசன்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் புகழ்.
இப்போது வலிமை, எதற்கும் துணிந்தவன், விஜய் சேதுபதி புதிய படம் என அடுத்தடுத்து நடித்து வருகிறார்.
ரகசிய திருமணம்
புகழ் தனது காதலி பென்ஸ் ரியா என்பவரை நேற்று தனது பெற்றோர்கள் சம்மதத்துடன திருமணம் செய்துகொண்டார், அந்த புகைப்படங்களையும் அவரே வெளியிட்டார்.
ஆனால் புகழ் ஒரு வருடத்திற்கு முன்பே ரகசியமாக பெரியார் படிப்பகத்தில் பதிவு திருமணம் செய்துகொண்டாராம்.