தனது வளர்ச்சிக்கு துணையாக இருந்த வடிவேல் பாலாஜிக்காக புகழ் செய்த செயல்... வாழ்த்தும் ரசிகர்கள்
Cwc புகழ்
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தான் புகழ்.
முதல் 2 சீசன்களில் இவர் செய்த அட்டகாசங்களுக்கு ஒரு எல்லையே இல்லை என்று தான் கூற வேண்டும். இந்நிகழ்ச்சி கொடுத்த புகழ் இப்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
பிறந்தநாள்
கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான புகழ் பென்சி என்பவரை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
கடந்த 2023ம் ஆண்டு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது, மகளுக்கு ரித்தான்யா என பெயர் சூட்டினர்.
மகளின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை படு கோலாகலமாக நடத்தியுள்ளார் புகழ். அந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.
பிறந்தநாளை முடித்த கையோடு தனது இன்ஸ்டாவில் எல்லோரும் பாராட்டும் வண்ணம் ஒரு விஷயத்தை செய்துள்ளார் புகழ்.
அதாவது தனது வளர்ச்சிக்கு துணையாக இருந்த மறைந்த வடிவேல் பாலாஜி அவர்கள் தனது குழந்தையை தூக்கி வைத்திருப்பது போல் புகைப்படத்தை எடிட் செய்து, இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் பக்கத்தில் என பதிவு செய்துள்ளார் புகழ்.

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu
