கோலாகலமாக நடந்த குக் வித் கோமாளி பிரபலம் புகழ் மனைவியின் வளைகாப்பு- ஆஜரான தொலைக்காட்சி பிரபலங்கள்
குக் வித் கோமாளி புகழ்
கலக்கப்போவது யாரு போன்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காமெடி செய்து பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ் புகழ் என ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு பிரபலம் ஆனவர் புகழ்.
அந்நிகழ்ச்சி கொடுத்த பிரபலம் சந்தானத்தின் சபாபதி, சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், சசிகுமார் உடன் அயோத்தி, விஜய் சேதுபதியுடன் டிஎஸ்பி என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.
ஜூ கீப்பர் என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகி இருக்கிறார், யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
மனைவியின் வளைகாப்பு
புகழ் கடந்த ஆண்டு தனது நீண்டநாள் காதலியான பென்ஸி என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், கடந்த மாதம் தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் தகவலை ஒரு அழகிய போட்டோஷூட் மூலம் அறிவித்து இருந்தார் புகழ்.
இன்று புகழ் தன் மனைவி பென்ஸிக்கு வளைகாப்பு நடத்தி இருக்கிறார்.
கோலாகலமாக நடைபெற்ற இந்த வளைகாப்பு நிகழ்வில் குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி, விஜய் டிவி காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.