பாக்கியலட்சுமி சீரியலில் மாஸான விஷயம் செய்த நடிகை ரித்திகா- யாருக்கு தெரியும்
பாக்கியலட்சுமி சீரியலில் மக்களுக்கு பரீட்சயப்பட்ட சிலர் நடித்தாலும் புதுமுகங்களும் நடிக்கின்றனர். இப்போது அவர்கள் அனைவரின் முகமும் மக்கள் மனதில் நிலைத்துவிட்டது.
இதில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் சில மாதங்களுக்கு முன் நடிக்க தொடங்கியவர் நடிகை ரித்திகா. குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் இவர் பாலாவுடன் இணைந்து அடிக்கும் ரைமிங் வசனங்களுக்கு எல்லோரும் அடிமை என்றே கூறலாம்.
சீரியலில் ரித்திகாவுக்கு மிகவும் அமைதியான ஒரு வேடம், இப்போது தான் அவரது காட்சிகள் அதிகம் காண்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி சீரியலில் ரித்திகா பாடல் பாடும் காட்சிகள் இடம்பெற்றன.
அந்த பாடலை அவரே தனது சொந்த குரலில் பாடி அசத்தியுள்ளார். இந்த விஷயம் தெரிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
