பிரபல நடிகரும், குக் வித் கோமாளி பிரபலத்தின் தாயார் உயிரிழப்பு...
கடந்த 2014ம் ஆண்டு நடிகர் பார்த்திபன் இயக்கி, தயாரித்த படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம்.
இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கியவர் சந்தோஷ் பிரதாப். கிட்டத்தட்ட 20க்கும் அதிகமான படங்கள் நடித்தாலும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
இவர் நடித்த படங்களில் தாயம், பயமா இருக்கு, பொதுநலன் கருதி போன்ற படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பெரிய அங்கீகாரமும் பெற்றார். சினிமாவில் இப்போது வெற்றியை நோக்கி பயணிக்கும் சந்தோஷ் வாழ்க்கையில் ஒரு சோகம் ஏற்பட்டுள்ளது.
அதாவது சந்தோஷின் தாயார் இந்திரா பாய் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மாலை 7.40 மணிக்கு மருத்துவமனையில் காலமானார்.
இவரது இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் 3 மணி முதல் 4 மணி அளவில் வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
You May Like This Video