தனது கணவர் சொன்ன வார்த்தை மளமளவென கண்ணீர்விட்டு அழுத ஷபானா... குக் வித் கோமாளி 6 அழகிய தருணம்
குக் வித் கோமாளி 6
ரியாலிட்டி ஷோக்களின் ராஜாவாக இருக்கும் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா என நிறைய ஹிட் ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அதேபோல் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.
சமையலை முக்கிய கான்செப்ட்டாக கொண்டாலும் கூடவே சமைக்க தெரியாதவர்களை வைத்து நிகழ்ச்சியில் நடந்த கலாட்டாக்கள் ஏராளம்.
இப்போது 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, முன்பு போன்ற டச் இல்லை என்றாலும் இந்த 6வது சீசனிற்கு நல்ல வரவேற்பு தான்.
அழுத ஷபானா
இந்த 6வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு வருகிறார் பிரபல சீரியல் நடிகை ஷபானா. ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற தொடர் மூலம் பிரபலமானார், இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார்.
தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷபானாவின் கணவரும் சீரியல் நடிகருமான ஆர்யன் கலந்துகொண்டு தனது மனைவி குறித்து பெருமையாக பேசியுள்ளார்.
அவர் பேசுவதை கேட்டு மளமளவென கண்ணீர்விட்டு அழுதுள்ளார் ஷபானா.

இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri

இந்தியா-ரஷ்யா புதிய ஒப்பந்தம்: ரயில்வே, அலுமினியம், சுரங்க தொழில்நுட்பங்களில் கூட்டு முயற்சி News Lankasri
