இந்த ஜுஸ் குடிச்சா முகம் பிங்க் நிறத்தில் மாறும்.. பிக்பாஸ், CWC புகழ் ஷ்ருத்திகா டிப்ஸ்
ஷ்ருத்திகா
தமிழ் சினிமாவில் 2002ம் ஆண்டு ஸ்ரீ படத்தில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஷ்ருத்திகா அர்ஜுன்.
பின் தமிழில் ஆல்பம், நள தமயந்தி, தித்திக்குதே என படங்கள் நடித்தவர் மலையாளத்தில் Swapnam Kondu Thalabharam என்ற படத்திலும் நடித்தார்.
ஆனால் படங்கள் எதுவும் பெரிய ரீச் கொடுக்கவில்லை, பின் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் நல்ல பிரபலம் ஆனார், 3வது சீசனில் கலந்துகொண்டவர் வெற்றியாளரும் ஆனார்.
கடைசியாக ஹிந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 18வது சீசனில் கலந்துகொண்டு அங்குள்ள ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.
டிப்ஸ்
பீட்ரூட் உடலுக்கு மட்டும் தான் நல்லது என்று நினைத்தால் அது தவறு. ஏனெனில் பீட்ரூட் நமது சருமத்தின் அழகை அதிகரிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கிறது. அதில் பலரும் அறிந்தது உதட்டின் நிறத்தை பிங்க்காக மாற்றலாம் என்பது தான்.
குறிப்பாக பீட்ரூட்டைக் கொண்டு கோடை காலத்தில் சருமத்தை பராமரிப்பது தான் மிகவும் சிறந்தது. இதற்கு அதில் நிறைந்துள்ள சத்துக்கள் தான் முக்கிய காரணம்.
இது இரும்பு மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்களின் வளமான மூலமாகும், இது கருவளையங்களை குறைத்து உங்கள் முகத்தை பொலிவாக்க உதவுகிறது என கூறுகிறார்.