சிவாங்கிக்கு பிடித்த ஒரே தமிழ் நடிகர் இவர்தானாம்- சிவகார்த்திகேயன் இல்லீங்கோ
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகியாக திறமையை சிவாங்கி வெளிப்படுத்தி இருந்தாலும் அவரை அதிகம் பாப்புலர் ஆக்கியது குக்கு வித் கோமாளி தான்.
அந்த ஷோவுக்கு நடிகர் சிவகார்த்திகேயனும் ரசிகர் என்பதால் ஒரு எபிசோடுக்கு வந்திருந்தார். அதற்கு பிறகு அவர் நடிக்கும் டான் படத்தில் நடிக்க சிவாங்கிக்கு வாய்ப்பு கொடுத்தார்.
இதன் மூலமாக சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கும் சிவாங்கியின் புகழ் வேற லெவலுக்கு சென்றிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு fan meet நிகழ்ச்சியில் சிவாங்கி பங்கேற்று இருக்கிறார்.
அதில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. "பேருந்தில் நீங்க போறீங்க, அப்போது ஒரே ஒருவர் மட்டும் தான் அதில் இருக்கிறார், அது உங்களது பேவரைட் ஹீரோ" என சொல்ல.. சிவாங்கி உடனே "தளபதி விஜய்யும் துல்கர் சல்மானும்" என கூறுகிறார்.
இதை கேட்டு அங்கிருப்பவர்கள் அனைவரும் அதிகம் கைதட்டி ஆரவாரம் செய்திருக்கிறார்கள்.