CWC புகழ் சுனிதா ஒரு படத்தில் நாயகியாக நடித்துள்ளாரா... இது எத்தனை பேருக்கு தெரியுமா, முழு விவரம்
சுனிதா
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்பதற்கு ஏற்ப உதாரணமாக இருப்பவர் தான் சுனிதா.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் தான் சுனிதா கோகோய். டான்ஸ் திறமையை வைத்துக்கொண்டு தமிழகம் வந்தவர் கிடைக்கும் வாய்ப்புகளில் தொடர்ந்து நடனம் ஆடி வந்தார்.
அதன்மூலம் விஜய் டிவி நடன நிகழ்ச்சிகளில் பங்குபெற வாய்ப்பு கிடைக்க வெறிக்கொண்டு நடனம் ஆடி வந்தார். ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் வாங் மற்றும் சுனிதா ஜோடி ரசிகர்களின் பேவரெட்டாக இருந்தனர்.

தமிழே தெரியாமல் தனது திறமைகளை காட்டி மக்களின் பாராட்டுக்களை பெற்ற சுனிதாவிற்கு ரீச் கொடுத்த இன்னொரு நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.
இதில் சுனிதா சமையலில் செய்யும் கலாட்டாவும், அதைவிட அவர் தமிழில் ரைமிங் வார்த்தைகள் பேசுகிறேன் என செய்யும் அட்டகாசங்களும் தான் அதிகம்.

நாயகி
நடனம் ஆடுவது, குக் வித் கோமாளி என ஆக்டீவாக இருந்த சுனிதா Sunita Xpress என்ற யூடியூப் பக்கத்தையும் தொடங்கி டான்ஸ், மேக்கப் ரொட்டின், ஃபன் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இப்போது சுனிதா நாயகியாக நடித்துள்ள ஒரு படம் குறித்த தகவல் தான் வந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு மான் வேட்டை என்ற படத்தில் சுனிதா நாயகியாக நடித்துள்ளாராம், அதற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
ஆனால் படம் சரியான வரவேற்பு பெறவில்லை, இதோ படத்தின் போட்டோ,
