ஹெலிகாப்டர் வாங்க போறேன்.. குக் வித் கோமாளி நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் இவ்வளவு பெரிய பணக்காரரா
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி ஷோவின் புது நடுவராக வந்திருக்கிறார். அவர் பிரபல சமையல் கலைஞர் மட்டுமின்றி தொழிலதிபரும் ஆவார்.
தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் நடத்தும் விசேஷங்கள் பலவற்றிற்கும் மாதம்பட்டி ரங்கராஜ் தான் சமையல். அது மட்டுமின்றி அவர் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிற்கும் உணவு வழங்கும் பிரம்மாண்ட கிளவுட் கிச்சன்களை நடத்தி வருகிறார்.
ஹெலிகாப்டர் வாங்க போறேன்
மாதம்பட்டி ரங்கராஜ் மிகப்பெரிய பணக்காரர் என்பதும், பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார் என்பது ம் குறிப்பிடத்தக்கது.
விரைவில் அவர் ஹெலிகாப்டர் ஒன்றை வாங்க போகிறாராம். அதை அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
"எனக்கு நேரம் தான் முக்கியம். முக்கிய நகரங்களுக்கு சமையல் செய்யபோகும்போது விமானத்தில் சென்று வருகிறேன். ஆனால் சின்ன ஊர்களுக்கு செல்லும்போது காரில் செல்ல அதிகம் நேரம் எடுக்கிறது. அதானால் ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுத்துக்கொண்டே செல்கிறேன்".
"அடுத்து சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்க போகிறேன். எனது ஒவ்வொரு நிமிடத்திற்கும் என்ன மதிப்பு என எனக்கு தெரியும். 10 வருடம் கழித்து என் நேரத்தின் மதிப்பு உயரும். அதனால் நேரத்தை மிச்சப்படுத்த ஹெலிகாப்டர் வாங்குகிறேன்" என மாதம்பட்டி ரங்கராஜ் கூறி இருக்கிறார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
