ஏற்கெனவே வெளியிட்ட வீடியோ பரபரப்பு முடியல, அதற்குள் மணிமேகலை வெளியிட்ட இன்னொரு வீடியோ.... வாழ்த்தும் ரசிகர்கள்
குக் வித் கோமாளி
ஒரே ஒரு வீடியோ போட்டு சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பியிருக்கிறார் தொகுப்பாளினி மணிமேகலை.
குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் தனக்கு தன்னை வேலை செய்ய ஒரு போட்டியாளர் விடவில்லை என கூறி தனக்கு சுயமரியாதை அவசியம் என அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்.
தனக்கு நடந்த விஷயம் குறித்து அவர் ஒரு வீடியோ வெளியிட அதைப்பற்றி பேசி பலர் நிறைய விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
புதிய வீடியோ
இப்படி மணிமேகலை வெளியிட்ட வீடியோ பரபரப்பாக போக அவர் இன்னொரு புதிய வீடியோவை யூடியூபில் வெளியிட்டுள்ளார்.
அது என்ன வீடியோ என்றால், மணிமேகலை தனது வீட்டில் 4 வருடங்களாக பணிபுரிந்து வந்த லட்சுமி அக்காவிற்கு சமைத்து போட்டு புதிய புடவை எல்லாம் எடுத்து கொடுத்து அவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
மணிமேகலை தங்களது வீட்டில் பணிபுரிந்து வந்தவருக்காக செய்த விஷயங்களை கண்ட ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

இனி சீமான் ஆட்டம்தான்.. இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து கூட்டணிக்கு வந்தால்.. விஜய்க்கு அழைப்பு IBC Tamilnadu
