தொலைந்தது 2 லட்சம் ரூ. பைக், அதை வைத்து இத்தனை லட்சம் சம்பாதித்தாரா மணிமேகலை?
ஒருகாலத்தில் சன் மியூசிக் சேனலில் முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் மணிமேகலை. அந்த சேனலில் இருந்து விலகி அவர் விஜய் டிவியில் தற்போது பணியாற்றி வருகிறார். அவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக இல்லாமல் தற்போது குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக காமெடியில் கலக்கி வருகிறார்.
மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஹுசைன் இருவரும் சொகுசு கார்கள் மற்றும் பைக்குகளை வாங்கி குவித்து வருகின்றனர். அவர்கள் புதுப்புது கார்களை வாங்கும் வீடியோக்களை, கிராமத்திற்கு செல்லும் வீடியோக்களை தங்கள் youtube சேனலில் vlog போல வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் 2 லட்சம் மதிப்புள்ள அவர்களின் பைக் ஒன்றை மர்மநபர் திருடி சென்றுவிட்டார். அது பற்றி போலீசில் புகார் அளித்து இருக்கின்றனர்.
இன்று குக் வித் கோமாளி ஷோவில் மணிமேகலை சோகமாகவே வந்திருந்தார். அதை பார்த்த நடுவர் செஃப் வெங்கடேஷ் பட், 'அவரது 2 லட்சம் ருபாய் பைக் தொலைந்துவிட்டது' என எல்லோருக்கும் கூறினார்.
மேலும் அதை வைத்து மணிமேகலையை அவர் கிண்டல் செய்தார். "தொலைந்தது 2 லட்சம் பைக் தான், ஆனால் அதை வைத்து வீடியோ வெளியிட்டு 5 லட்சம் ருபாய் சம்பாதித்து விட்டார் மணிமேகலை" என வெங்கடேஷ் பட் கூறினார்.