கூட நடிக்க வேண்டாம், அவரை ஒரு முறை நேரில் பார்த்தாலே போதும்: குக் வித் கோமாளி புகழ்
விஜய் டிவியின் குக் வித் கோமாளி மூலமாக மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் புகழ். தற்போது காமடியனாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
புகழ்
பல டாப் ஹீரோ படங்களில் காமெடியனாக நடிக்க ஒப்பந்தமாக நடித்து வரும் புகழ், சோலோ ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற படத்தில் அவர் ஹீரோவாக நடித்து வருகிறார்.
அந்த படத்தின் ஷூட்டிங் பிலிப்பைன்ஸ் நாட்டில் உண்மையான மிருகங்களுடன் நடந்து இருக்கிறது.

ரஜினியுடன் நடிக்க ஆசை
இந்நிலையில் புகழ் அளித்து இருக்கும் பேட்டி ஒன்றில் தனக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி உடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார்.
அப்படி இல்லை என்றால் ரஜினியை ஒரு முறை நேரில் பார்த்தால் கூட போதும் எனவும் அவர் கூறி இருக்கிறார்.

திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri