கஷ்டமா இருக்கு, அழுகையா வருது- திடீரென கடும் சோகத்தில் புகழ், காரணமே இதுதானாம்
விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக எந்த நிகழ்ச்சி ஓடுகிறது என்பது நமக்கே தெரியும்.
குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி தான், இந்நிகழ்ச்சியை ஓரங்கட்டும் அளவிற்கு இப்போதைக்கு வேறு எந்த நிகழ்ச்சியும் இல்லை என்று தான் கூற வேண்டும்.
தமிழில் உருவாக்கப்பட்ட இந்நிகழ்ச்சி இப்போது கன்னடத்தில் தொடங்கப்பட்டுள்ளது, இது தொலைக்காட்சிக்கும் நமக்கும் கிடைத்த பெருமை என்று தான் கூற வேண்டும்.
கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு வாரமும் நம்மை சிரிக்க வைத்த இந்நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது. இன்னும் ஒரு வார நிகழ்ச்சியே உள்ளது, இறுதிகட்ட நிகழ்ச்சி மட்டும் தான்.
அதற்கான படப்பிடிப்பு அண்மையில் முடிந்துள்ளது, சில புகைப்படங்களையும் நாம் பார்த்தோம். ஆனால் யார் ஜெயித்தார்கள் என்ற விஷயம் இன்னும் வெளியாகவில்லை.
இந்த நேரத்தில் மக்களை விட குக் வித் கோமாளி போட்டியாளர்கள் தான் கடும் வருத்தத்தில் உள்ளனர். நிகழ்ச்சி முடிந்துவிட்டது, அவர்கள் காமெடியில் கலக்கி வந்த அந்த ஷோ இனி இல்லை.
புகழ் தனது இன்ஸ்டா பக்கத்தில் கஷ்டமாக இருக்கிறது, நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது என இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்டுள்ளார்.