லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் சிவாங்கிக்கு இவ்ளோ கஷ்டமா
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் முக்கிய கோமாளியாக இருந்து வருகிறார் சிவாங்கி. பாடகியான அவர் சூப்பர் சிங்கர் ஷோவில் பங்கேற்று புகழ்பெற்றதை விட CWC மூலமாக பெற்ற புகழ் தான் அதிகம்.
தற்போது திரைப்படங்களிலும் அவர் காமெடியாக நடித்து வருகிறார். விஜய் டிவி ஷோக்களில் பங்கேற்பதன் மூலமாக சிவாங்கி லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் சிவாங்கிக்கு எந்த கஷ்டமும் இல்லை என பதிவிட்டு இருக்க அவருக்கு பதில் கூறி தனக்கு இருக்கும் கஷ்டங்களை பட்டியலிட்டு இருக்கிறார் சிவாங்கி.
"எங்களுக்கு நாங்க பண்ற ஒவ்வொரு வேலையும் உங்களுக்கு பிடிக்குமா, பிடிக்காதா என்கிற டென்ஷன் இருக்கும். உங்களுக்கு பிடிக்க பிடிக்க வேலை பண்ணா தான் இங்கே இருக்கவே முடியும். சோ எந்த வாழ்க்கையும் யாரு வாழ்க்கையும் ஈஸி கிடையாது. Rich, மிடில் க்ளாஸ், ஏழை.. எல்லோருக்கும் அவரவர் பிரச்சனைகள் இருக்கும்" என சிவாங்கி தெரிவித்து இருக்கிறார்.