விஜய் டிவி சுனிதாவின் காதலர் யார் தெரியுமா? இத்தனை வருடங்களுக்கு பின் தெரியவந்த உண்மை
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் தற்போது கோமாளியாக கலக்கி வருபவர் சுனிதா. தமிழ் தெரியாமல் அவர் தப்பு தப்பாக தமிழ் பேசுவது தான் அவரது காமெடி. அதை வைத்து மற்றவர்களும் காமெடி செய்வார்கள்.
சுனிதா விஜய் டிவியில் பல வருடங்களாக இருந்து வருகிறார். அவர் பல டான்ஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். ஆனால் அவர் அங்கிருந்து ட்ராக் மாறி தற்போது காமெடியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
சுனிதா டான்ஸ் மாஸ்டர் வாங் என்பவர் உடன் அதிகம் நெருக்கமாக இருப்பதால் அவரை காதலிக்கிறார் என பல முறை வதந்தி வந்திருக்கிறது. சமீபத்தில் ஒரு சேனலில் சுனிதாவை பேட்டி எடுத்தபோது அங்கு வாங் வந்து ரோஜாப்பூ கொடுத்து சுனிதாவிடம் ப்ரொபோஸ் செய்திருக்கிறார்.
சுனிதா ஷாக் ஆகி அவரை நண்பராக மட்டும் பார்ப்பதாக சொல்லி இருக்கிறார். அதற்கு பிறகு தான் வாங் செய்தது பிராங்க் என தெரியவந்திருக்கிறது. "Wong I will kill you for this prank" என சுனிதா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.
இதனால் அவர்கள் காதலிக்கிறார்கள் என்கிற வதந்திக்கு முற்றுப்புள்ள வைத்திருக்கின்றனர்.