பிக்பாஸ் 9வது சீசனில் கலந்துகொள்ளாதது ஏன்?.. ஓபனாக கூறிய CWC புகழ் உமைர் லத்தீப்
பிக்பாஸ் 9
விஜய் தொலைக்காட்சி என்றாலே ரியாலிட்டி ஷோக்கள் தான் பேமஸ்.
அதிலும் பிரம்மாண்டத்தின் உச்சமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் ஆரம்பித்த கிரேஸ் இப்போது 9வது சீசன் வரை அப்படியே ரசிகர்களிடம் உள்ளது.
கடந்த அக்டோபர் 5ம் தேதி பிக்பாஸ் 9வது சீசன் பிரம்மாண்டத்தின் உச்சமாக 20 போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க தொடங்கியது. முதல் வாரத்தில் பிரவீன் காந்தி எலிமினேட் ஆனார், அவருக்கு முன்பு நந்தினி அவராகவே வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.
உமைர் விளக்கம்
இந்த பிக்பாஸ் 9வது சீசனில் குக் வித் கோமாளி புகழ் உமைர் கலந்துகொள்ள போகிறார் என உறுதியாக கூறப்பட்டது, ஆனால் அது நடக்கவில்லை.
இதுகுறித்து உமைர், சுனிதாவுடன் சேர்ந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், பிக்பாஸ் சென்றிருக்கலாம் தான், சிலர் Wild Card செல்லுங்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள்.
ஆனால் என்ன காரணம் என்றால், சுனிதா கூறுகையில் அவர் 5 படங்களுக்கு கமிட்டாகியுள்ளார். இதன் காரணமாக தான் அவர் பிக்பாஸ் செல்லவில்லை என கூறியுள்ளார்.

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan
