CWC-ல் சர்ச்சை உருவாக்க பாக்குறாங்க, பிக் பாஸ் வேண்டவே வேண்டாம்.. நடிகை வித்யூலேகா அதிர்ச்சி வீடியோ

By Parthiban.A Jul 21, 2022 01:40 PM GMT
Report

தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 3ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார் காமெடி நடிகை வித்யூலேகா. அவர் திருமணமாகி செட்டில் ஆகிவிட்ட நேரத்தில் தான் குக் வித் கோமாளி வாய்ப்பு வந்தது. அதை ஏற்றுக்கொண்டு அவர் தற்போது CWC 3ல் பைனல் வரை முன்னேறி இருக்கிறார்.

கடந்த வாரம் ஒளிபரப்பப்பட்ட வைல்டு கார்டு எபிசோடில் கிரேஸ் கருணாஸ் அவரது advantage பயன்படுத்தி முத்துகுமாரிடம் இருந்த sweet potatoவை வாங்கிக்கொண்டார். இதனால் முத்துக்குமார் டென்சன் ஆனார்.

அதை பற்றி கிரேஸ் கருணாஸ் "அவர் காண்டாகிட்டார்" என கூற.. அதற்கு வித்யூலேகா 'ஆனால் ஆகட்டும், நீங்க போட்டியில் இருந்து எலிமினேட் ஆகி இருக்கீங்க, அவர் செமி பைனல் வரை வந்துவிட்டார். நீங்க அதை புரிஞ்சிக்கோங்க' என கூறுவார்.

CWC-ல் சர்ச்சை உருவாக்க பாக்குறாங்க, பிக் பாஸ் வேண்டவே வேண்டாம்.. நடிகை வித்யூலேகா அதிர்ச்சி வீடியோ | Cwc Vidyullekha Raman Rejects Bigg Boss 6

இதை பார்த்த ரசிகர்கள் 'வித்யூலேகாவுக்கு முத்துக்குமார் மேல என்ன கோபம்' என கேட்டு வருகின்றனர். அதற்க்கு தற்போது இன்ஸ்டாகிராமில் பதில் அளித்துள்ளார் வித்யூலேகா.

"அவர் மேல ஒரு சொட்டு நெகடிவ் பீலிங் கூட இல்லை. அவர் talented cook, பைனலிஸ்ட் ஆக வந்திருக்க வேண்டும் என்று கூட சொன்னேன். கிரேஸ் அக்காவை ஊக்கப்படுத்த தான் நான் அப்படி பேசினேன்" என கூறி இருக்கிறார்.

மேலும் அடுத்து பிக் பாஸ் வாய்ப்பு வந்தால் போவீங்களா என கேட்டதற்கு, "ஒரு fun ஷோ குக் வித் கோமாலியிலேயே controversy create பண்ண பாக்குறாங்க, பிக் பாஸ் எல்லாம் போனால்.. வேண்டவே வேண்டாம். நான் நல்லா இருக்கேன்" என கூறி இருக்கிறார்.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US