சூர்யா 40 படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார் பட நட்சத்திரம்..! யார் தெரியுமா? அதிகாரப்பூர்வமான தகவல்..
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சென்ற வருடம் வெளியான சூரரை போற்று திரைப்படம் பெரிய வெற்றியடைந்துள்ளது.
அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நவரச என்ற Anthology வெப் சீரிஸில் நடித்து வந்தார். அதன் படப்பிடிப்பு பணிகளும் விரைவில் முடியவுள்ளது.
இந்நிலையில் சூர்யா அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இதனிடையே தற்போது இப்படத்தில் இசையமைப்பாளர் D.இமான் தான் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இமான் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திலும் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Music Director @immancomposer will be composing the music for #Suriya40bySunPictures@Suriya_offl #DirectorPandiraj #Suriya40 pic.twitter.com/h5SVfv5pTZ
— Sun Pictures (@sunpictures) January 24, 2021