42வது பிறந்தநாளை கொண்டாடும் டி.இமான்.. இசையமைப்பாளரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
டி.இமான்
பல மெலோடி பாடலுக்கு சொந்தக்காரராக இருக்கும் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் டி.இமான்.
நடிகர் விஜய், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான படம் தமிழன். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கி 22 ஆண்டுகளாக அசத்தி வருகிறார்.
சுமார் 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளவர் நிறைய மெலோடி பாடல்கள் கொடுத்து மக்களிடம் நெருக்கமாகிவிட்டார். இவர் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்காக தேசிய விருது எல்லாம் பெற்றார்.
சொத்து மதிப்பு
இன்று டி.இமான் தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
ஒரு படத்திற்கு இசை அமைக்க ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் பெறுகிறார். ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 9 முதல் 10 கோடிகள் வரை என கூறப்படுகின்றது.
2021ம் ஆண்டின் கணக்குப்படி இவரின் சொத்து மதிப்பு ரூ. 55 கோடி முதல் ரூ. 60 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.