இசையமைப்பாளர் டி. இமானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம்
டி. இமான்
தமிழ் சினிமாவில் உள்ள தரமான இசையமைப்பாளர்களில் ஒருவர் டி. இமான். இவர் தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். தற்போது மாம்போ, வள்ளிமயில், மலை, பப்ளிக் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
பிறந்தநாள்
இன்று இசையமைப்பாளர் டி. இமானின் 43வது பிறந்தநாள். ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், டி. இமானின் மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து மதிப்பு
அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு ரூ. 60 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இவர் ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ. 2 முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
