பூஜையுடன் தொடங்கிய D44 திரைப்படம், படக்குழுவுடன் தனுஷ்
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் தான் D44, இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது.
மேலும் இப்படத்தில் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் குறித்து நேற்று சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. அந்த வகையில் இப்படத்தில் பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது இன்று இப்படத்தின் பூஜை நடந்துள்ளது. இதில் தனுஷ், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இப்படத்தின் தலைப்பை இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கவுள்ளனர்.
.@dhanushkraja's #D44 shooting commences Today! #D44Poojai@anirudhofficial #MithranRJawahar @prakashraaj #Bharathiraja @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @RIAZtheboss pic.twitter.com/bIXIu2gStU
— Sun Pictures (@sunpictures) August 5, 2021