Daayra (இந்தி): திரை விமர்சனம்

By Sivaraj Sep 19, 2026 09:00 AM GMT
Report

பிரித்விராஜ், கரீனா கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள Daayra இந்தி திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

Daayra (இந்தி): திரை விமர்சனம் | Daayra Movie Review

கதைக்களம்

2019ஆம் ஆண்டில் DCP ராமன் குமார் செய்த ஒரு விஷயத்திற்காக மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடுகிறார்கள். அதனை டிவியில் பார்க்கும் ஒரு குடும்பம் சோகத்தில் இருக்க, ராகினி என்ற இளம்பெண்ணை வன்புணர்வு செய்து கொன்றவர்களை DCP ராமன் என்கவுன்டர் செய்திருக்கிறார் என்பது பின்னர் தெரிய வருகிறது.

அதுகுறித்து பத்திரிகையாளர்கள் சில கிடுக்குப்பிடி கேள்விகளை கேட்க, அதற்கு பதில் கொடுக்க முடியாமல் தடுமாறும் DCP ராமன் சட்டென பேட்டியை முடிக்கிறார்.

Daayra (இந்தி): திரை விமர்சனம் | Daayra Movie Review

இதனால் அது போலி என்கவுன்டர் ஆக இருக்கலாம் என சந்தேகம் எழ, மற்றொரு DCP அஜோனி கோஹ்லி (கரீனா கபூர்) தனது குழுவுடன் உண்மையை கண்டுபிடிக்க களமிறங்குகிறார்.

அதனைத் தொடர்ந்து, அவருக்கு ஒவ்வொரு விஷயமாக தெரிய வர சில சந்தேகங்களும் ஏற்படுகின்றன. பின்னர் அது போலி என்கவுன்டரா? இல்லையா? என்பதை அஜோனி நிரூபித்தாரா என்பதே மீதிக்கதை.

Daayra (இந்தி): திரை விமர்சனம் | Daayra Movie Review

Resident Evil திரை விமர்சனம்

Resident Evil திரை விமர்சனம்

படம் பற்றிய அலசல்

இந்தியாவை உலுக்கிய நிர்பயா சம்பவத்தை கண்முன் நிறுத்தும் கதைக்களத்தை மேக்னா குல்ஸர் எழுதி இயக்கியுள்ளார். பிரித்விராஜ் சுகுமாரன் இருப்பதால் இந்தி மற்றும் மலையாளம் என இருமொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது.

ஆனால் படத்தின் திரைக்கதை ஸ்லோபர்ன் திரில்லர் ஆக மலையாளப் படம் போன்றே மெதுவாக நகரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதுவே படத்திற்கு பின்னடைவாகவும் அமைந்துள்ளதுதான் வருத்தம்.

Daayra (இந்தி): திரை விமர்சனம் | Daayra Movie Review

பிரித்விராஜ் நல்லவரா கெட்டவரா என்ற சஸ்பென்ஸை கிளைமேக்ஸ் வரை தக்கவைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். முதல் பாதி வரை வரும் கரீனா கபூர் ஒரு கட்டத்தில் காணாமல் போகிறார். பின்னர் திடீரென கதைக்குள் வருவது உறுத்தல்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வலியையும், காவல்நிலையத்தில் எளிய மக்களை நடத்தும் விதத்தையும் எதார்த்தமாகவும், நேர்த்தியாகவும் காட்டியுள்ளார் இயக்குநர் மேக்னா. அதே சமயம், சிறு சிறு அலட்சியங்களும் பெரிய தப்புகளுக்கு வழிவகுக்கும் என்கிற கருத்தை இயக்குநர் இன்னும் சுவாரஸ்யமான திரைக்கதையில் கூறும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்.

Daayra (இந்தி): திரை விமர்சனம் | Daayra Movie Review

தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம்

தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம்

பிரிதிவிராஜ், கரீனாவைத் தாண்டி ஷிதீ ஜோஷி, பவேஷ் பப்பாணி இருவரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். அசிந்த் கௌரின் அறிமுக காட்சி தேவையில்லாத ஆணி. டெக்னிக்கலாக எந்த குறையும் இல்லாத படம். அமித் திரிவேதியின் பாடல்கள், கேத்தன் சோதாவின் பின்னணி இசை சிறப்பு. சௌரப் கோஸ்வாமியின் ஒளிப்பதிவு மிரட்டல்.

க்ளாப்ஸ்

  • கதை
  • நடிகர்களின் பங்களிப்பு
  • இசை

பல்ப்ஸ்

  • மெதுவான திரைக்கதை
  • பொறுமையை சோதிக்கும் படத்தின் நீளம்

மொத்தத்தில் Daayra சொல்ல வந்த கருத்தை முன்னிறுத்தாமல், நட்சத்திரங்களை முதன்மைப்படுத்த பார்த்ததால் சறுக்கிவிட்டது. எனினும் ஒருமுறை பார்க்கலாம்.

Daayra (இந்தி): திரை விமர்சனம் | Daayra Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US