Dacoit: திரை விமர்சனம்

By Sivaraj Apr 10, 2026 12:25 PM GMT
Report

அத்வி சேஷ், மிர்ணாள் தாகூர், அனுராக் காஷ்யப் நடிப்பில் மிகுந்த எதிர்பர்ப்புடன் தெலுங்கு, இந்தி திரைப்படமாக வெளியாகியுள்ள Dacoit பார்வையாளர்களை கவர்ந்ததா என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்

பணக்கார வீட்டு பெண்ணான சரஸ்வதி (மிர்ணாள் தாகூர்), ஹரி (அத்வி சேஷ்) இருவரும் காதலிக்கின்றனர்.

இந்த விஷயம் சரஸ்வதியின் குடும்பத்திற்கு தெரிய வருகிறது. ஹரியின் வீட்டிற்கு தனது ஆட்களுடன் செல்லும் சரஸ்வதியின் அண்ணன் அவரை தாக்குகிறார். அத்துடன் மல்லி என்ற பெண் பலாத்காரத்திற்கு உள்ளாகிறார். அந்த இடத்திலேயே சரஸ்வதியின் அண்ணனை ஹரி கொல்கிறார்.

ஆனால் காவல் நிலையத்தில், மல்லியை பலாத்காரம் செய்தது ஹரிதான் என்றும், அதை தடுக்க வந்த தன் அண்ணனை அவர் கொன்றுவிட்டதாகவும் சரஸ்வதி பொய்யாக வாக்குமூலம் கொடுக்கிறார்.

Dacoit: திரை விமர்சனம் | Dacoit Movie Review

இதனால் பல ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஹரி, 2021யில் அதுல் குல்கர்னியினின் உதவியுடன் சிறையில் இருந்து தப்பிக்கிறார். சரஸ்வதி குடும்பமாக வாழ்ந்தாலும் உயிருக்கு போராடும் அவரது கணவருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது.

அதற்கு சரஸ்வதி அவதிப்படுவதை அறியும் ஹரி, அவரை பழிவாங்க கொள்ளை சம்பவத்தில் அவரை தன்னுடன் ஈடுபட வைக்கிறார். அதன் பின்னர் ஹரி எப்படி சரஸ்வதியை பழிவாங்கினார்? உயிருக்கு போராடும் சரஸ்வதியின் கணவர் பிழைத்தாரா? என்பதே மீதிக்கதை.

 படம் பற்றிய அலசல்

அத்வி சேஷ், மிர்ணாள் தாகூரின் கெமிஸ்ட்ரி அருமையாக ஒர்கவுட் ஆகியுள்ளது. நடிப்பை பொறுத்தவரை இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.

அத்வி சேஷ் ஆக்ஷன், ரொமான்ஸ் இரண்டிலும் அசத்தியிருக்கிறார். அதே சமயம் வில்லத்தனமான நடிப்பிலும் மிரட்டுகிறார். சீதா ராமம் படத்திற்கு பிறகு மிர்ணாள் தாகூர் இப்படத்தில் அழகான நடிப்பை தந்துள்ளார்.

அனுராக் காஷ்யப், பிரகாஷ் ராஜ், அதுல் குல்கர்னி போன்ற பெரிய நடிகர்கள் இருந்தாலும் அவர்களை சரியாக பயன்படுத்தவில்லை என்பது உறுத்தல். இருந்தாலும் மற்ற இருவரை ஒப்பிடுகையில் அனுராக்கிற்கு நல்ல கதாபாத்திரம்.

Dacoit: திரை விமர்சனம் | Dacoit Movie Review

காதல்; அதில் வரும் துரோகம்.. அதற்கு பழி வாங்கும் ஹீரோ என முதல் பாதி சுவார்ஸ்யமாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் வரும் ட்விஸ்ட்கள் ஓரளவு யூகிக்க முடிந்தாலும், அவை வெளிப்படும் இடங்களில் அட என்று சொல்ல வைக்கின்றன.

இயக்குநர் ஷனெய் தியோ பரபரப்பான திரைக்கதை அமைத்து எமோஷனல் ரெய்டு செய்திருக்கிறார். தெலுங்கு படங்களுக்கே உரித்தான லாஜிக் மீறல்கள் இருந்தாலும், திரைக்கதையின் வேகம் அவற்றை மறக்க செய்கின்றன.

பீம்ஸ், கியானியின் இசை சிறப்பு. தனுஷ் பாஸ்கரின் ஒளிப்பதிவு அருமை. ஆக்ஷன் காட்சிகள் பிரமாதம்.

க்ளாப்ஸ்

  • அத்வி சேஷ், மிர்ணாள் தாகூர் நடிப்பு
  • திரைக்கதை
  • கிளைமேக்ஸ்  

பல்ப்ஸ்

  • சில லாஜிக் மீறல்கள்
  • பிரகாஷ் ராஜ், அதுல் குல்கர்கர்னியை நன்றாக பயன்படுத்தியிருக்கலாம்

மொத்தத்தில் இந்த Dacoit சில குறைகள் இருந்தாலும் ஒரு நல்ல ரைடு.

Rating: 2.75/5  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US