டாடா படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
டாடா
கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் நேற்று வெளிவந்த படம் டாடா. கணேஷ் கே. பாபு இயக்கத்தில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
முதல் ஷோ சற்று குறைவான ரசிகர்களுடன் துவங்கினாலும், அதன்பின் திரையரங்கில் கூட்டம் வரத்துவங்கியுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில், டாடா படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் மட்டுமே இப்படம் ரூ. 1.5 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்திருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
இன்னும் வரும் நாட்களில் கண்டிப்பாக பெரிய தொகையை டாடா திரைப்படம் வசூல் செய்ய அதிக வாய்ப்புகள் என தெரிகிறது.
கண்டிப்பாக கவின் மற்றும் அபர்ணா தாஸ் இருவருக்கும் நல்ல அடையாளம் கொடுக்கும் படமாக டாடா அமையும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.
கோடி ரூபாய் கொடுத்தாலும் அஜித்துடன் நடிக்க மாட்டேன்.. 38 வயது நடிகையின் அதிரடி முடிவு

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
