டான்ஸ் ஜோடி டான்ஸ் பிரபலம் பஞ்சமியை குடும்பத்துடன் வீட்டிற்கு அழைத்துள்ள பிரபல நடிகர்.. எமோஷ்னலான போட்டியாளர்
டான்ஸ் ஜோடி டான்ஸ்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று டான்ஸ் ஜோடி டான்ஸ்.
கடந்த மார்ச் 1ம் தேதி படு மாஸாக தொடங்கப்பட்டது. இந்த நடன நிகழ்ச்சியை விஜய் மட்டும் தொகுத்து வழங்கி வர புதிய சீசனில் மணிமேகலையும் தொகுப்பாளினியாக களமிறங்கியுள்ளார்.
சினேகா, பாபா பாஸ்கர் நடுவராக களமிறங்க இவர்களுடன் புதியதாக வரலட்சுமியும் களமிறங்கியுள்ளார். நடன நிகழ்ச்சி வெற்றிகரமாக தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வர இதில் நடனம் ஆட வந்த பஞ்சமி அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
திருமணம், 3 பிள்ளைகள் ஆன பின்பு நடன ஆட ஆசைப்பட்ட இவருக்கு அவரது கணவர் துணையாக இருந்துள்ளார்.
அண்மையில் ஒளிபரப்பான ஷோவில் பஞ்சமிக்கு வீடியோ காலில் வந்து வாழ்த்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் சரத்குமார்.
அதோடு அவரை தனது வீட்டிற்கு குடும்பத்துடன் உணவு சாப்பிட வர வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை கேட்டு பஞ்சமி அப்படியே எமோஷ்னல் ஆகிறார்.

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
