Dance Jodi Dance Reloaded 3 நிகழ்ச்சியில் சூரி கொடுத்த வாக்கு.. காலில் விழுந்த பஞ்சமி, அப்படி என்ன நடந்தது?
மாமன் படம்
தமிழக மக்கள் எப்போதுமே சொந்த பந்தம், பாசம் என உறவுகளுக்கு கட்டுப்பட்டவர்கள்.
அப்படி பாசத்திற்கு அடிமையான மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது நடிகர் சூரி நடித்துள்ள மாமன் திரைப்படம்.
தாய்மாமன் உறவை பற்றி அழுத்தமான கதைக்களத்துடன் காட்டப்பட்டுள்ள இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கி வருகிறது.
சூரி செயல்
மாமன் படம் வெற்றிகரமாக ரிலீஸ் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறது, படத்தின் புரொமோஷனையும் சூப்பராக செய்துள்ளார் சூரி.
அப்படி இந்த திரைப்படத்தின் புரொமோஷனுக்காக நடிகர் சூரி ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அவர் சென்ற போது Dedication சுற்று நடந்துள்ளது, அனைவரின் நடனத்தையும் பாராட்டி இருந்தார்.
பஞ்சமி விவசாயிகள் பற்றியும், அவர்கள் கடன் வாங்கி கஷ்டப்படும் விஷயங்களை தனது நடனத்தின் மூலம் வெளிப்படுத்தினார்.
அவரது நடனம் முடிந்து நடிகர் சூரி பேசும்போது, உங்களை பற்றி அறிந்திருக்கிறேன், உங்களுக்கு எத்தனை குழந்தைகள், காது குத்திவிட்டீர்களா என கேட்க அதற்கு பஞ்சமி இல்லை என்கிறார்.
உடனே சூரி தாய் மாமனாக உங்களது பிள்ளைகளுக்கு நான் காது குத்துகிறேன், அந்த செலவை நான் ஏற்கிறேன் என கூறி பஞ்சமியை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu
