டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 Reloaded, போட்டியாளருக்கு பிரபலம் கொடுத்த கார் பரிசு... நிகழ்ச்சி மேடையில் நெகிழ்ச்சி சம்பவம்
டான்ஸ் ஜோடி டான்ஸ் 3
நடனம் ஆடாதவர்களே இந்த உலகத்தில் இல்லை. ஆடத் தெரியாதவர்கள் கூட வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நடனம் ஆடி ரசித்திருப்பார்கள்.
மக்கள் பொழுதுபோக்கிற்கு பார்க்கும் தொலைக்காட்சியில் நடனத்தை வைத்து ரியாலிட்டி ஷோக்கள் அதிகம் வந்துவிட்டது.

சுகன்யாவின் முகத்திரையை கிழித்த ராஜி, மீனா, ஷாக்கான குடும்பத்தினர்- பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட்
அப்படி இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 Reloaded நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள். கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த ரியாலிட்டி ஷோ வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
ஆர்.ஜே. விஜய் மற்றும் மணிமேகலை ஆகியோர் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர், சினேகா மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.
பைனல் நிகழ்ச்சி
வரும் ஜுலை 20, டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் பைனல் நிகழ்ச்சி. இந்த சீசனை யார் வெல்லப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் பைனல் நிகழ்ச்சியின் புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது, அதில் செம மாஸ் நடனம் ஆடி அசத்திய தில்லைக்கு ஒருவர் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
சேலம் ஆர்ஆர் பிரியாணியின் உரிமையாளர் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு வந்து தில்லைக்கு ஒரு கார் பரிசளித்துள்ளார். நிகழ்ச்சி மேடையில் நெகிழ்ச்சி சம்பவத்தின் புரொமோ இதோ,

மன்னிக்கவே முடியாது; உயிரிழந்தவரின் சகோதரர் திட்டவட்டம் - கேரள நர்சுக்கு மரண தண்டனை உறுதி? IBC Tamilnadu
