ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 நிகழ்ச்சியில் வெற்றிப்பெற்ற போட்டியாளர்கள்.. பஞ்சமிக்கு கிடைத்த பரிசு?
டான்ஸ் ஜோடி டான்ஸ்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 நிகழ்ச்சி பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகி வந்தது.
சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ரியாலிட்டி ஷோக்கள் மக்களிடம் அதிக வரவேற்பு பெறவே இதில் போட்டிபோட மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
பரிசுகள்
அப்படி பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாக தொடங்கிய டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 ரீலோடட் நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது.
இதில் வெற்றிபெற்றவர்கள் குறித்தும், பரிசுத் தொகை எவ்வளவு என்பதை இங்கே காண்போம் டான்ஸ் ஜோடி டான் 3 நிகழ்ச்சியின் இறுதி கட்டத்திற்கு 5 போட்டியாளர்கள் தேர்வாகி இருக்கின்றனர், தில்லை-ப்ரீத்தா, நிதின்-தித்யா, சபரீஷ்-ஜனுஷிகா, பிரஜனா-கங்கனா, திலீப்-மெர்சீனா ஆகிய 5 பேர் தான்.
இந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 ரீலோடட் நிகழ்ச்சியின் டைட்டிலை நிதின் மற்றும் தித்யா வென்றார்கள்.
1 Runner Up தில்லை மற்றும் ப்ரீயா வென்றுள்ளார்கள்.
வெற்றிப்பெறவில்லை என்றாலும் பஞ்சமி மகன்களுக்கு சினேகா சீர்வரிசை கொடுத்திருக்கிறார், வரலட்சுமி சொத்து எழுதி கொடுத்திருக்கிறார். அதேபோல் ஜீ தமிழில் பஞ்சமிக்கு சீரியலில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.