விஜய்யுடன் நடனம் ஆட மறுத்துள்ள பிரபல நடன இயக்குனர், ஆனால்... பிரபலம் தகவல்
நடிகர் விஜய்
தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர் விஜய், யார் படத்திற்கு வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ, ஆனால் இவரது படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு உள்ளது.
மார்க்கெட் குறித்து சொல்லவே வேண்டாம், வியாபாரம், பாக்ஸ் ஆபிஸ் தாறுமாறாக நடக்கும். விஜய் தனது திரைப்பயணத்தில் கடைசியாக நடிக்கும் படம் ஜனநாயகன், படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக உள்ளது.

படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் 27ம் தேதி மலேசியாவில் படு பிரம்மாண்டமாக நடக்க உள்ளது.
ரீ-வைண்ட்
நடிகர் விஜய்யின் போக்கிரி படம் குறித்து நடிகர் வையாபுரி ஒரு விஷயம் பகிர்ந்திருந்தார்.

அந்த பேட்டியில் அவர், போக்கிரி படத்தில் பிரபுதேவாவுடன் எப்படியாவது நடனமாட வேண்டும் என்று விஜய்க்கு ஆசை. நான் மாஸ்டருக்கு நெருக்கம் என்பதால் விஜய் என்னிடம் சொன்னார்.
இந்த விஷயத்தை நானும், ஸ்ரீமனும் பிரபுதேவாவிடம் சொல்ல அதற்கு அவர், முதலில் வேண்டாம், நான் அவருடன் தோன்ற வேண்டாம் என மறுத்தார். பின் நாங்கள் விடாமல் நச்சரித்து அவரை சம்மதிக்க வைத்தோம் என கூறியுள்ளார்.
