கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் ‘டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் சீசன் – 2’:

colors tamil dance vs dance 2
By Kathick Oct 28, 2021 06:45 PM GMT
Report

சென்னை, அக். 23- தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 32 போட்டியாளர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் 16 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் தங்களை தயார்படுத்தி உள்ளனர். டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

நடிகை குஷ்பு மற்றும் நடன இயக்குனர் பிருந்தா ஆகியோரின் அற்புதமான வரவேற்புடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. அவர்கள் போட்டியாளர்கள் மற்றும் அந்தந்த அணி உரிமையாளர்களை சந்தித்து பேசினர். அதில் நடிகர் ஷாம், நடன இயக்குனர் ஸ்ரீதர், நடிகை அபிராமி மற்றும் நடிகை இனியா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்

இந்த நிகழ்ச்சியின் பல சிறப்பு அம்சங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. வரவிருக்கும் நிகழ்ச்சிகளில் அனிமேஷன், துள்ளல் நடனம், பங்க் டான்ஸ், பிரேக் டான்ஸ், கிளாசிக்கல் டான்ஸ், லத்தீன் சல்சா, ஆப்ரோ டான்ஸ் மற்றும் லிரிகல் டான்ஸ் போன்ற பல்வேறு நடனங்கள் இடம்பெற உள்ளன. போட்டிச் சுற்று அக்டோபர் 23-ந் தேதி அன்று துவங்குகிறது. இதில் கீழ்க்கண்ட குழுக்கள் பங்கேற்க இருக்கிறது.

1. வினோஷ் ஆனந்த் மற்றும் சையத் கபீர்

2. சாண்டி சுந்தர் மற்றும் நந்திகா

3. செராபின் மற்றும் சிவன்

4. நாவலரசன் மற்றும் அலிஷா

5. சாய் மற்றும் அரவிந்த்

6. ஜாக்கி மற்றும் பிருத்விராஜ்

7. மெர்சினா மற்றும் ராய்சன்

8. ஹரி மற்றும் பிரியதர்ஷினி

9. காவ்யா மற்றும் மகாலட்சுமி

10. பிளாக் மற்றும் கார்த்திக்

11. அனுஷா மற்றும் சுபாங்கி

12. ஜூட் மற்றும் ரக்ஷனா

13. அஞ்சனா மற்றும் அபிராஜ்

14. அபிராமி மற்றும் மாதுரி

15. மனோஜ் மற்றும் அமிர்தா

16. அல்கெனா மற்றும் ஆயிஷு 

இந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பேச்சாளர் ஞானசம்பந்தமும் இடம் பெற்றுள்ளார். அவர் தமிழ் கலாச்சாரத்தின் நுணுக்கங்களை விரிவாக எடுத்துரைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும் ஒவ்வொரு நடனத்தின் வரலாற்று பின்னணியையும் பாரம்பரியத்தையும் பார்வையாளர்களுக்கு தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும், வரவிருக்கும் நிகழ்ச்சியில், நடிகை குஷ்பு பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைக்கப்போகிறார். அது அவர்களை நிச்சயம் வாயடைக்கச் செய்யும். டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் நிகழ்ச்சி வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. 

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் ‘டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் சீசன் – 2’: | Dance Vs Dance 2

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US