இந்த வாரம் டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2 இல் இளையராஜா ஸ்பெஷல் சுற்று
அக்டோபர் 30 மற்றும் 31 ஆம் தேதி வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கலர்ஸ் தமிழில் டான்ஸ் திருவிழாவை கண்டு மகிழுங்கள் சென்னை 30 செப்டம்பர் 2021: தமிழகத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொது பொழுதுபோக்கு தொலைக்காட்சியான, கலர்ஸ் தமிழின் மிகப் பிரபலமான டான்ஸ் ரியாலிட்டி ஷோ, டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2, பார்வையாளர்களை மீண்டும் கவர தயாராக உள்ளது.
பவர்ட் பை (powered by) நிப்பான் பெயின்ட் மற்றும் ஸ்பெஷல் பார்டனர் (special partner) ஓரியோ உடன் இனைந்து விம் வழங்கும் டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2வின் இந்த வார எபிசோடில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களைக் கொண்டாடும் வகையில் ஒரு அழகிய நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2 இல் நடக்கும் கடுமையான போட்டியைப் கண்டு மகிழ, வரும் சனி மற்றும் ஞாயிறுக்கிழமை, 30 மற்றும் 31 அக்டோபர் 2021 இரவு 7:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைகாட்சியை டியுன் செய்யவும் . இந்த வார எபிசோடில் இசையமைப்பாளர் இளையராஜாவின் 'வாவா பக்கம் வா,' 'என் ஜோடி மஞ்சக் குருவி,' போன்ற பிரபல பாடல்களுக்கு நடுவர்கள் குஷ்பூ மற்றும் பிருந்தா மாஸ்டர் முன்னிலையில், ஷ்யாம், ஸ்ரீதர் மாஸ்டர், இனியா மற்றும் அபிராமியின் அணிகள் நடனமாட உள்ளனர்.
டேங்கோ முதல் பரதநாட்டியம் வரை, பல சுவாரசியமான பர்ஃபாமன்ஸ்களை வழங்க உள்ளனர். போட்டியை மேலும் கடுமையாகும் வகையில், இந்த வாரம் நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் இடம்பெறவுள்ளது. உற்சாகத்தை மேலும் ஒரு படி உயர்த்தும் வகையில், டான்ஸ் vs டான்ஸின் சிறப்பான இந்த வாரத்தில் குஷ்பூ உடன் இனைந்து ஸ்ரீதர் மாஸ்ர் 'ரம் பம் பம் ஆரம்பம்' என்ற பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.
இந்த சனி மற்றும் ஞாயிறு, அக்டோபர் 30 மற்றும் 31 ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு கலர்ஸ் தமிழில் டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2 இல் கற்பனைக்கும் எட்டாத நடனத்தை தவறாமல் கண்டு மகிழுங்கள்,